search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலியோ சொட்டு மருந்து"

    • ஆயிரக்கணக்கான குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து பெறலாம் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
    • பிரசாரம் வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது.

    ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா பகுதியில் அவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கான ஒப்பந்தங்கள் இன்னும் கையெழுத்தாகாமல் நீடித்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து பெறலாம் அவதிக்குள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கவில்லை என்றால் ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    இந்த நிலையில், இஸ்ரேலும் ஹமாஸும் காசா பகுதியின் பல்வேறு பகுதிகளில் 3 நாட்கள் போரை இடைநிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதனால் போலியோவுக்கு எதிரான முதல் சுற்று தடுப்பூசியை வழங்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கான பிரசாரம் வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது.

    போர் இடைநிறுத்தங்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை (உள்ளூர் நேரம்) நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

    • அமைச்சர் தா.மோ.அன்பரசன் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.
    • சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டது.

    போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.

    இந்த மையங்களில் 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

    அதன்படி, சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டது. 

    சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்நிலையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை தொடங்கியது.

    பல்லாவரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.

    சொட்டு மருந்து செலுத்தும் முகாம்களில் ஏராளமான தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்திக் கொண்டு சென்றனர்.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

    • தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.
    • சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

    சென்னை:

    போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43,051 மையங்களில் நடைபெறும்.

    இந்த மையங்களில் 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

    சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    இந்நிலையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை தொடங்கியது.

    பல்லாவரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.

    • தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
    • இந்த மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

    சென்னை:

    போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43,051 மையங்களில் நடைபெறுகிறது.

    சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இதில் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    இந்நிலையில், போலியோ இல்லாத சமுதாயம் தொடர சொட்டு மருந்து வழங்குங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக முக ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில், போலியோ இல்லாச் சமுதாயம் தொடர சொட்டு மருந்து வழங்குங்கள். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் சொட்டு மருந்து வழங்க வேண்டும். நலமான குழந்தைகளே எதிர்காலத்திற்கான ஒளி என பதிவிட்டுள்ளார்.

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் 93,394 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கு வதற்கு மாவட்ட சுகாதார நலத்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
    • நடமாடும் குழுக்கள் மூலம் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

    காஞ்சிபுரம்:

    தமிழகம் முழுவதும் நாளை (3-ந்தேதி) போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 93,394 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கு வதற்கு மாவட்ட சுகாதார நலத்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

    அதன்படி ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் பள்ளிகள் என மொத்தம் 731 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

    நடமாடும் குழுக்கள் மூலம் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து குடிபெயர்ந்து வந்த குழந்தைகள் உள்ளிட்டோர் போலியோ சொட்டு மருந்து போட்டு பயன் பெறலாம் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

    • நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறுகிறது.

    இம்மையங்களில் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.

    யுனிசெப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் போலியோ முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன.

    சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

    தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு கை கழுவுவது, சானிடைசர் உபயோகப்படுத்துவது கட்டாயமாகும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.

    அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும்.

    முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. புலம் பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோசொட்டு மருந்து வழங்கப்படும்.


    போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 3000-க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படும். போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயண வழி மையங்கள் மூலமாக சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழ்நாடு தொடர்ந்து 20 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்கவைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். எனவே, பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பயங்கரவாத தாக்குதல்களால் போலியோ சொட்டு மருந்து இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.
    • போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் மேற்கத்திய நாடுகளின் சதி என்று குற்றச்சாட்டு.

    கராச்சி:

    பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் குழுவினர் மீது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

    குவெட்டாவின் நவா கில்லி பகுதியில் நிகழ்ந்த இந்த துப்பாக்கி சூட்டில், சொட்டு மருந்து குழுவினருக்கு பாதுகாப்பிற்காக சென்ற 2 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். போலியோ மருந்து குழுவினர் காயமின்றி தப்பினர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் போலியோ சொட்டு மருந்து இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இதேபோல் கடந்த காலங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக பலுசிஸ்தான் மற்றும் கைபர் பாக்துன்க்வா மாகாணங்களில் இத்தகைய பயங்கரவாத தாக்குதல்களால் போலியோ சொட்டு மருந்து இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.

    போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் மேற்கத்திய நாடுகளின் சதி என்றும், பாகிஸ்தான் குழந்தைகளுக்கு கருத்தடை செய்யும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் பல்வேறு மத தலைவர்களும், பயங்கரவாத குழுக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆண்டுக்கு 10 லட்சம் கர்ப்பிணிகளுக்கும் 9 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.
    • பிறந்த குழந்தைகளுக்கு இரு தவணைகளாக 6-வது வாரத்திலும், 14-வது வாரத்திலும் போலியோ தடுப்பூசி வழங்கப்படுகிறது.

    சென்னை:

    தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் போலியோ 3-வது தவணை தடுப்பூசி வழங்கும் திட்டம் தமிழகத்தில் வரும் 4-ந்தேதி தொடங்கப்பட உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.

    அதன்படி அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    ஆண்டுக்கு 10 லட்சம் கர்ப்பிணிகளுக்கும் 9 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. பிறந்த குழந்தைகளுக்கு இரு தவணைகளாக 6-வது வாரத்திலும், 14-வது வாரத்திலும் போலியோ தடுப்பூசி வழங்கப்படுகிறது.

    இதை தவிர போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் உருவெடுத்தாலும் முன் எச்சரிக்கையாக பிறந்த குழந்தைகளுக்கு 9-ல் இருந்து 12 மாதங்களுக்குள் 3-ம் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.

    அதன் அடிப்படையில் தமிழகத்தில் வரும் 4-ந்தேதி முதல் வழக்கமான தடுப்பூசிக்காக வரும் குழந்தைகளுக்கு தகுதியின் அடிப்படையில் 3-ம் தவணை போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட சுகாதார அலுவலர்கள் முன்னெடுக்க வேண்டும்

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது
    பெரம்பலூர்:

    இளம்பிள்ளை வாத நோயை இந்தியாவில் ஒழிக்க, பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 387 மையங்களில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா, தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர்.

    இதேபோல் போலியோ சொட்டு மருந்து மையங்களில், சுகாதாரப்பணியாளர்கள், அங்கான்வாடி பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஆக மொத்தம் 1,548 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 45 ஆயிரத்துக்கு மேற்பட்ட 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இம்முறை ஒரே ஒரு தவணை மட்டுமே போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டதால் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை காலையிலேயே மையங்களுக்கு அழைத்து வந்து மருந்து கொடுத்து விட்டு சென்றனர்.

    முகாமில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் சம்பத், ரோட்ரி கிளப் உறுப்பினர்கள், திட்ட அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர், அரசு அலுவலர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

    அரியலூர் மாவட்டத்தில் 549 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. அரியலூர் பஸ் நிலையத்தில் நடந்த முகாமில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை வழங்கினார். அரியலூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில் 2,193 பணியாளர்கள் ஈடுபட்டனர். நேற்று நடந்த முகாமில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. முகாமில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் ஹேமசந்த்காந்தி, வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாரயணன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் உமாமகேஸ்வரி, நகர்புற மருத்துவமனை டாக்டர் நிரஞ்சனா, தாசில்தார் கதிரவன், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    தமிழகம் முழுவதும் 43,051 மையங்கள் மூலம் சுமார் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி காலையில் இருந்து நடைபெற்று வருகிறது. #Polio #PolioDrop
    தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டன.

    சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.



    அதன்படி இன்று காலை 7 மணிக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடங்கியது. சென்னையில் முதல்வர் எடப்படி பழனிசாமி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் உடனிருந்தார்.

    மதுரை மாவட்டத்தில் நாளை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. 2,85,400 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #Polio
    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் நாளை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

    இது குறித்து கலெக்டர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் நாளை (ஞாயிறு) போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் 2,85,400 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிறந்தது முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முகாமில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

    குறிப்பாக வேறு மாநிலத்தில் இருந்து குடிபெயர்ந்து வந்துள்ள குழந்தைகள், செங்கல் காளவாசல், நரிக்குறவர், இலங்கை அகதிகள் ஆகியோரின் குழந்தைகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தி சொட்டு மருந்து வழங்கப்படும்.

    இந்த சொட்டு மருந்து மையங்கள் அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், சத்துணவு மையங்களில் அமைந்துள்ள சொட்டு மருந்து வழங்கும் பூத்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படும்.

    இதை தவிர்த்து நடமாடும் குழுக்கள் மூலமாகவும் பஸ் நிலையம், புகைவண்டி நிலையம், விமான நிலையம் ஆகிய இடங்களில் பூத்கள் அமைத்து சொட்டு மருந்து வழங்கப்படும்.

    சொட்டு மருந்து வழங்கும் பணியை கண்காணிக்க பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிககள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத்தவிர்த்து சுகாதாரத் துறை மூலமாக 9 மேற்பார் வையாளர்களும், ஆரம்ப சுகாதார நிலைய அளவில் 200 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தப்பணியில் சுகாதாரத்துறை மூலமாக 1,167 பணியாளர்கள், சத் துணவுத்துறை மூலமாக 2,490 பணியாளர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலமாக 85 பணியாளர்கள் உட்பட 7412 பணியாளர்கள் ஈடுபடு கிறார்கள்.

    முகாமிற்கு தேவையான பொது சுகாதாரத்துறையைச் சேர்ந்த வாகனங்கள் 44 மற்றும் பிற துறை வாக னங்கள் 73 ஈடுபடுத்தப்பட உள்ளன.

    இதற்கு முன் எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து போட்டிருந்தாலும், இந்த சொட்டு மருந்து முகாமில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாது போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ நோயை முழுமையாக ஒழிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #Polio
    தமிழகத்தில் ‘ட்ரை வேலண்ட்’ சொட்டு மருந்து பயன்படுத்தப்படவில்லை. அதனால் போலியோ சொட்டு மருந்து குறித்த எந்த பாதிப்பும் தமிழகத்தில் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. #PolioDrops
    சென்னை:

    குழந்தைகளை தாக்கும் போலியோ வைரஸ் 3 வகையானது. முதல் வகை, 2-வது வகை, 3-வது வகை என பிரிக்கப்பட்டுள்ளது.

    இந்த 3 வகை வைரஸ்களும் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வந்ததால் உலகம் முழுவதும் ‘ட்ரைவேலண்ட்’ என்ற சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

    இதன் மூலம் 2 வகையான போலியோ வைரஸ் பாதிப்புகளில் இருந்து குழந்தைகள் பாதுகாக்கப்பட்டு வந்தன.

    நாடு முழுவதும் இந்த ‘ட்ரைவேலண்ட்’ சொட்டு மருந்து 2016 வரை வழங்கப்பட்டு வந்த நிலையில் 2-வது வகை போலியோ வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட்டதால் 2016-க்கு பிறகு பை-வேலண்ட் சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    உலகம் முழுவதும் ‘ட்ரை வேலண்ட்’ சொட்டு மருந்து நிறுத்தப்பட்டு தற்போது பை-வேலண்ட் சொட்டு மருந்து வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    பிறந்த குழந்தைகளுக்கு இவ்வகை சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது. 1½ மாதம், 2½ மாதம், 3½ மாதம் மற்றும் 1½ வயது போன்ற காலங்களில் இந்த சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசி போடப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒழிக்கப்பட்ட ‘ட்ரை வேலண்ட்’ சொட்டு மருந்தை மீண்டும் மருந்து கம்பெனி மத்திய அரசுக்கு வினியோகம் செய்துள்ளது.

    மத்திய சுகாதாரத்துறை அதனை உத்தரபிரதேசம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் சப்ளை செய்துள்ளது. குழந்தைகளுக்கு சொட்டு மருந்து, தடுப்பூசியும் போடப் பட்டது.

    ஆனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கிடையில் அந்த மருந்தை மத்திய சுகாதாரத்துறை கண்காணித்ததில் அவை ஏற்கனவே நிறுத்தப்பட்ட மருந்து என தெரியவந்தது.

    தொடர் கண்காணிப்பின் மூலம் நிறுத்தப்பட்ட மருந்து மீண்டும் வினியோகம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை வினியோகம் செய்த அந்த மாநிலங்களிலும் மருந்து சப்ளை நிறுத்தப்பட்டு திரும்ப பெறப்பட்டது.

    இது குறித்து மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. நிறுத்தப்பட்ட ‘ட்ரை வேலண்ட்’ போலியோ சொட்டு மருந்தை மீண்டும் மருந்து நிறுவனம் தவறுதலாக அனுப்பி இருந்ததை மத்திய சுகாதாரத்துறை கண்காணித்து கண்டு பிடித்ததையடுத்து அந்த மருந்து வினியோகம் செய்த 3 மாநிலங்களில் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளது.

    இதனால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொட்டு மருந்தை உட்கொண்ட குழந்தைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. வழக்கம் போல தற்போது ‘பை-வேலண்ட்’ சொட்டு மருந்து, தடுப்பூசி குழந்தைகளுக்கு போடப்படுகிறது. பெற்றோர்கள் பயப்பட தேவையில்லை.



    பொதுமக்கள் போலியோ சொட்டு மருந்து குறித்த வதந்தியை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் ‘ட்ரை வேலண்ட்’ சொட்டு மருந்து வினியோகம் செய்யப்படவில்லை.

    இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:-

    ட்ரை வேலண்ட் சொட்டு மருந்து தமிழகத்தில் பயன்படுத்தப்படவில்லை. எப்போதும் அனைத்து மருந்துகளும் 6 மாதம் இருப்பு வைக்கப்படும். அதனால் போலியோ சொட்டு மருந்து குறித்த எந்த பாதிப்பும் தமிழகத்தில் இல்லை.

    தொடர்ந்து சொட்டு மருந்து கொடுக்கலாம், ஊசியும் போட்டு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #PolioDrops

    ×